குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுபவர்கள் அச்சப்படும் வகையில் மிக கடுமையான சட்டம் விரைவில் இயற்றப்படும் என தேசிய குழந்தைகள் நலபாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆர்.ஜே.ஆனந்த் திருவாரூரில் கூறினார்.
திருவாரூர் மாவட்டதில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்திருந்தார், தேசிய குழந்தைகள் நலபாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆர்.ஜே.ஆனந்த், அப்போது அவர்
செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.’’
பள்ளிகளில், கல்லுரிகளில் பெண்குழந்தைகள் மீதான தாக்குதல் மற்றும் பாலியல் சீண்டல்கள் போன்ற பல பிரச்சனைகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவருகின்ற, பாதிக்கப்படுகின்ற குழந்தைகளுக்கு புத்துணர்ச்சி கவுன்சிலிங் வழங்கும் விதமாக புதியதிட்டம் விரைவில் இந்தியா முழுவதும் வரவுள்ளது.
குழந்தைகள் பாதுகாப்பை பொறுத்தவரை வட மற்றும் தென்தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுபவர்கள் இனி குழந்தைகளை தொடவே பயப்படும் வகையில் மிக கடுமையான சட்டம் விரைவில்இயற்றப்படும்.’’ என தெரிவித்தார்.