Skip to main content

18 பேரும் எங்கள் பக்கம் சேர்ந்தால் அமைச்சர் பதவியா ?? -எடப்பாடி

Published on 18/06/2018 | Edited on 18/06/2018

நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லிக்கு சென்று திரும்பிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னையிலிருந்து திருச்சி விமானநிலையத்திற்கு வந்தார். விமானநிலையத்தில் காத்திருந்த அதிமுக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறுகையில்,

 

edapadi

 

 

 

நேற்று நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமரிடத்திலும், நீர்வளத்துறை அமைச்சரிடத்திலும் காவேரி மேலாண்மை ஆணைய உறுப்பினர் கூட்டத்தை விரைவில் நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன். எனவே தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துவருகிறது. அதுபற்றி மத்திய அரசிடமும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்றார்.

 

 

 

அதேபோல் மேட்டூர் அணையில் நீர் எப்போது திறந்துவிடப்படும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறுகையில்,

செய்தியாளர்களாகிய உங்களுக்கு தெரிந்துதான். தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. தண்ணீர் முழுவதும் வந்து சேர்ந்து, மேட்டூர் அணை 90 அடியை எட்டிய பிறகு பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்றார்.

 

அதேபோல் 18 எம்.எல்.ஏக்கள் உங்கள் அணியில் சேரப்போகிறார்களாமே?  அதுமட்டுமின்றி வந்து சேர்பவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற பேச்சு அடிபடுகிறதே என்ற கேள்விக்கு 

நீங்கள்தான் அப்படி சொல்கிறீர்கள் அப்படி சேர்ந்தால் மகிழ்ச்சிதான் என்று கூறிய முதல்வர் அது எப்படி அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று செய்தியாளர்களிடம் திரும்ப கேட்டார்.  

சார்ந்த செய்திகள்