இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு இதுநாள் வரை அரசு ஒதுக்கியிருந்த வீட்டை காலி செய்ய கூறி நோட்டீஸ் விட்டுள்ளதையொட்டி அவர் அரசு ஆணையை மதித்து வீட்டை காலி செய்து, வேறு வாடகை வீட்டிற்கு இடம் பெயர்ந்துள்ளார். இந்த செய்தி தமிழக மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தமிழக அரசின் இந்த செயலுக்கு எதிராக தங்களது அதிருப்தி மற்றும் கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
![dmk](http://image.nakkheeran.in/cdn/farfuture/dImez7b4YIf_eVuYuh7DA3PtulYcpAxs15crg2Xrbeg/1557578378/sites/default/files/inline-images/assadsdsdsdsdd.jpg)
இந்நிலையில்,திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளதாவது,
மூத்த தோழர் நல்லகண்ணுக்கு அரசு சார்பில் உடனே வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அவருக்கு நெருக்கடியை இந்த அரசு கொடுக்காமல் உடனே வீடு ஒதுக்க ஏற்பாடு செய்யவேண்டும். நேர்மையாக வாழும் தலைவர்களுக்கு மரியாதை தரும் விதமாக வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கப்படுகிறது. அரசாங்கத்தை மதிக்கும் நல்லகண்ணுவின் நற்பண்பு போற்றுதலுக்குரியது. அப்படி போற்றுதலுக்குரிய தலைவரை உடனே வெளியேறச் செய்த அரசின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது எனக்கூறியுள்ளார்.