Skip to main content

தொடங்கியது மின்வெட்டு... தூக்கமின்றி தவிக்கும் மக்கள்!

Published on 10/05/2019 | Edited on 10/05/2019

கோடை வெயில் சுட்டெரிக்கிறது. ஃபானி புயலுக்கு தமிழக கடல் காற்று சென்றதால் மேலும் வெயிலின தாக்கம் அதிகரித்து பகலில் அனல் கக்குகிறது. இந்த நிலையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு வேறு மக்களை வாட்டி வதைக்கிறது.

 

கடந்த சில நாட்களில் புதுக்கோட்டை, ஆலங்குடி, வடகாடு, திருமயம் என்று மாவட்டம் முழுவதும் இரவு 9.45 மணிக்கு தீடீரென ஏற்பட்ட மின்வெட்டு சில இடங்களில் அரை மணி நேரத்தில் வந்தது. பல இடங்களில் ஒரு மணி நேரம் வரை நீடிக்கிறது. பகலிலும் இதேநிலை தான். அதனால்  குழந்தைகளுடன் வசிக்கும் மக்கள் முதிவர்கள் யாரும் தூங்க முடியாமல் தவிக்கிறார்கள். கொசுக் கடியால் அவதிப்பட்டு வருகின்றனர்.

     

power

 

மின்வாரிய அதிகாரிகளோ.. வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் மின்சாரம் முழுமையாக வருவதில்லை. உற்பத்தியும் குறைவாக உள்ளது. ஏ சி பயன்பாடும் அதிகரித்துள்ளது. அதனால் மின் தேவை அதிகமாக உள்ளது. ஆனால் போதிய அளவு மின்சாரம் கிடைக்காததால் மின் தடை ஏற்படுகிறது. மும்முனை மின்சாரமும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இப்போது  அரைமணி நேரமாக தொடங்கியுள்ள மின்வெட்டு இனிமேல் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தடை ஏற்படலாம் என்றனர்.

 

அறிவிக்கப்படாத மின்வெட்டால் தமிழகம் விழித்துக் கொண்டிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்