திருக்காரவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கிராமமக்கள் மெழுவர்த்தி ஏந்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் ஊராட்சியை மையமாக வைத்து ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு வேதாந்த நிறுவனத்திற்குஅனுமதி வழங்கி உள்ளது. இந்த அறிவிப்பிற்கு திருவாரூர் நாகை மாவட்டம் முழுவதும்கடும் கண்டனம் எழுந்து விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள், உள்ளிட்டபல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடைய திருக்காரவாசல் கிராம மக்கள் கடந்த 26ம் தேதி குடியரசு தினம் முதல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தைமேற்கொண்டுள்ளனர். நேற்று நடைபெற்ற 5 வது நாள் காத்திருப்பு போராட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் மெழுகுவர்த்திஏந்தி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தினர்.
காத்திருப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கீழ்வேளுர் திமுகசட்டமன்ற உறுப்பினர் மதிவாணன், பெ.மணியரசன், பி.ஆர். பாண்டியன் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர். காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்ற காவிரி உரிமை மீட்புக் குழுஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில் "தற்போதுதிருக்காரவாசலில் மட்டும் நடைபெறும் போராட்டம் இங்கு மட்டும் இல்லாமல் தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் ஹைட்ரோ கார்பன் எதிர்த்து போராட்டங்கள் நடத்தப் படவேண்டும். இந்த ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்திற்குள் வருவதை தடுக்க வேண்டும்." என தெரிவித்தார்.