![Stalin's tribute to the late ex-minister parithi ilavaluthi](http://image.nakkheeran.in/cdn/farfuture/Qc1QnJZxeFUMOix9nhjG6tCjnr1mlb-8989rtUvD5Nc/1539445106/sites/default/files/inline-images/f1aea936-550e-4a95-9dcc-a5775732d042.jpg)
தமிழக முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார். அவருக்கு வயது 58. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர் மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற உறுப்பினராக 6 முறை தேர்வான இவர், 1996-2001 காலகட்டத்தில் சட்டப்பேரவை துணைத்தலைவராக இருந்தார். திமுக ஆட்சியில் 2006 முதல் 2011 வரை செய்தி மற்றும் தகவல்துறை அமைச்சராகவும் இருந்துள்ளர். 2013-ல் திமுகவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அதிமுகவில் இணைந்தார்.
இந்நிலையில் பரிதி இளம்வழுதி உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலிக்கு பிறகு செய்தியாளர்களை சந்திக்கையில்,
பரிதி இளம்வழுதி மறைந்த திமுக தலைவரால் ''இந்திரஜித்'' மற்றும் ''வீர அபிமன்யூ'' என பாராட்டப்பெற்றவர் என கூறினார்.