Skip to main content

முதலமைச்சர் நாற்காலியையே பார்த்து கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

Published on 10/03/2018 | Edited on 10/03/2018
kadambur


மு.க.ஸ்டாலின் தனது எதிர்கட்சி பொறுப்பை சரியாக செய்யாமல் எப்பொழுதும் முதலமைச்சர் நாற்காலியையே பார்த்து கொண்டிருக்கிறார் என தமிழக செய்திதுறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எப்படியும் முதலமைச்சராக வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கனவு கண்டார். ஆனால் மக்கள் அதை நிராகரித்துவிட்டு அவர் எதிர்கட்சி தலைவராக இருக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்கள்.

ஆனால் மு.க.ஸ்டாலின் தனது எதிர்கட்சி பொறுப்பை சரியாக செய்யாமல் எப்பொழுதும் முதலமைச்சர் நாற்காலியையே பார்த்து கொண்டிருக்கிறார். எப்படியாவது இடையிலேயே தமிழக முதல்வராகி விட வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார். அவரது கனவு நனவாகாது.

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அ.தி.மு.க. ஆட்சி கவிழ்ந்து விடும் என்றார். மானிய கோரிக்கை சட்டசபை கூட்டம் நடக்காது என்றார். ஆனால் அவைகள் அனைத்தும் சிறப்பாக நடந்து முடிந்து விட்டது. வருகிற 2021 சட்டசபை தேர்தலில் மக்கள் கொடுக்கும் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்