Skip to main content

எடப்பாடியை எதிர்த்தால் டெட்பாடி! -கே.டி.ராஜேந்திரபாலாஜி அதிரடி! 

Published on 09/04/2019 | Edited on 09/04/2019

 

தமிழக பால்வளத்துறை அமைச்சர்  கே.டி.ராஜேந்திரபாலாஜி இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

“கல்லாப் பெட்டி,  பரிசுப் பெட்டியைத்தான்  டிடிவி தினகரன் கேட்கிறார். மக்களுக்குச் சேவை செய்யும் எண்ணம் தினகரனுக்கு துளியும் இல்லை. ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் ஒரு சதி வலையைப் பின்னுனாங்க. இப்ப அதையெல்லாம் உடைத்தெறிந்து கட்சியையும் ஆட்சியையும் எடப்பாடி நடத்திக்கொண்டிருக்கிறார்.

 

kt

 

அந்த நிலைமையெல்லாம் மாறிப்போச்சு. தினகரனுடைய நோக்கம் என்ன தெரியுமா? ஒரு மனிதனுடைய மனதில் என்ன இருக்கிறதோ அதுதான் வார்த்தையாக வெளிவரும். அவர் கஜானாவைத்தான் பார்க்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் ஆகிவிட்டால் கஜானாவை எடுத்துக்கொண்டு போய்விடலாமா? கஜானாவில் எவ்வளவு இருக்கிறது? இத்தனை லட்சம் கோடி இருக்கிறதாமே என்று கேட்கிறாராம். இத்தனை லட்சம் கோடியை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போய் விடுவதா? தூக்கிக்கொண்டு போய்விட முடியுமா? இன்னும் அவருடைய நடவடிக்கை அனைத்தும் பணம், பணம் என்றே இருக்கிறது. மனம் இல்லை; குணம் இல்லை. தினகரன் கட்சி இந்த தேர்தலுக்குப் பிறகு, கழுதை தேய்ந்து கட்டெறும்பானது மாதிரி ஆகிவிடும். 

 

எடப்பாடி விவசாயி அல்ல, விஷவாயு என்றா சொல்கிறார் ஸ்டாலின்? எடப்பாடியை எதிர்க்கும் அரசியல் இயக்கங்கள் அனைத்தும் டெட் பாடியாகத்தான் இருக்கின்றன. உயிருள்ள நடமாட்டம் உள்ள கட்சிகளாக எதுவும் இல்லை. எடப்பாடியை எதிர்ப்பதாகச் சொல்லிக்கொண்டு தங்களை டெட்பாடியாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, அரசியல் கட்சிகள்.  பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் அமைச்சர்களாகவோ, சட்டமன்ற உறுப்பினர்களாகவோ, யாராக இருந்தாலும் அவர்களை எடப்பாடி தூக்கி எறிந்துவிடுவார்.

 

ஸ்டாலின் பேச்சில் வன்மம் உள்ளது.   சண்டையைத் தூண்டி விடுகிறார். எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று ஏக்கப் பெருமூச்சு விடுகிறார். அது நடக்கவே நடக்காது. அதனால்தான்.  முதல்வரைக் கடுமையாகத் தாக்குகிறார். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நன்றாக இருப்பதால்தான், ஸ்டாலின் டீ சர்ட் போட்டு நடந்து சென்று ஓட்டு கேட்கிறார்.  திமுக ஆட்சிபோல் சட்ட ஒழுங்கு  இருந்தால் அவர் நடக்க முடியுமா? ஸ்டாலின் ஒரு இடத்தில் மட்டும் கூட்டத்தைக் கூட்டி பேசுகிறார்.  முதல்வரைப் போல் திறந்த வேனில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்வாரா? ஸ்டாலின் வெயிலில் பேசினால்  சுருண்டு விடுவார்.  அவரை நாம்தான் காப்பாற்ற வேண்டும். ஸ்டாலின் பேப்பரில் எழுதிக் கொடுத்ததைப் பார்த்துத்தான் படிக்கிறார். அதிலும் தடுமாற்றம்தான்.  சட்டமன்றத்திலும் எழுதி வைத்துக்கொண்டுதான்  பேசுவார்.   கலைஞரிடம் இருந்த திறமையில் கடுகளவு கூட  ஸ்டாலினிடம் இல்லை. சந்தர்ப்ப குழ்நிலை காரணமாக திமுக கட்சித் தலைவராகிவிட்டார்.  

 

எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்ததைப்  பின்னடைவு என்று சொல்ல முடியாது.  தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடும்.  தொழிற்துறை வளர்ச்சிக்கு சாலை வசதி மிகவும் அவசியம். அடுத்த கட்டமாக கூட்டணிக் கட்சி தலைவர்களை அழைத்துப் பேசி யாரும் பாதிக்காத அளவிற்கு  முதல்வர்  முடிவெடுப்பார். மோடியை எதிர்த்தவர்கள் லூசு பிடித்து சுற்றி வருகின்றனர். கருத்துக் கணிப்பைத் தாண்டி மக்களின் கணிப்பு உள்ளது. அவர்களின் கணிப்பு அதிமுக தான்.” என்றார். 

 

டெட்பாடி, லூசு என்றெல்லாம் வரம்பு மீறியே பேசிவருகிறார் கே.டி.ராஜேந்திரபாலாஜி! 
 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Judgment postponed in Nirmala Devi case

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின்னர் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.

இத்தகைய சூழலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே சமயம் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் 29 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார். 

Next Story

“இனியும் கட்சியில் நீடிக்க முடியாது” - ஆம் ஆத்மி அமைச்சர் அதிரடி ராஜினாமா!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
 Aam Aadmi Party minister resigns and says Can't stay in the party anymore

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து, அவரிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை சட்டவிரோத கைது என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ‘முதலமைச்சர் என்பதற்காக எந்த ஒரு சிறப்புச் சலுகையும் காட்ட முடியாது. மதுபானக் கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. தற்போதைய நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிட முடியாது. பொதுவாழ்வில் ஈடுபடும் நபர்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும்’ என்று கூறி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நேற்று (09.04.2024) உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை திடீர் ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இது குறித்து ராஜ்குமார் ஆனந்த் கூறுகையில், “ஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மியின் வலுவான செய்தியைப் பார்த்த பிறகு, நான் அதில் சேர்ந்தேன். ஆனால் இன்று, கட்சி ஊழல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் தன்னைக் கண்டறிந்துள்ளது. அதனால்தான் நான் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.

ஆம் ஆத்மி ஊழலில் ஆழமாக உள்ளது. மேலும் ஊழல்வாதிகளுடன் என்னால் வேலை பார்க்க முடியாது.  அரசியல் மாறினால் நாடு மாறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். இன்று அரசியல் மாறவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் மாறிவிட்டார்கள். எனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன். எங்களிடம் 13 மாநிலங்களவை எம்பிக்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் யாரும் பட்டியலினத்தவர், பெண்கள் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை. இந்த கட்சியில் பட்டியலின எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், அமைச்சர்களுக்கு மரியாதை இல்லை. அத்தகைய சூழ்நிலையில், அனைத்து பட்டியல் இன மக்களும் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். இதனால், இனியும் நான் கட்சியில் நீடிப்பது கடினம்.” என்றார்.