ஒரு கதாநாயகியைக் கூட தொட்டு நடித்ததில்லை என்று நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ள புகார் குறித்து இயக்குனர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் நடிகைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாக பரபரப்பாக குற்றம் சாட்டி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினார் நடிகை ஸ்ரீரெட்டி. முதலில் தெலுங்கு இயக்குநர்கள், நடிகர்கள் மீது குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். தெலுங்கில் இருந்து தமிழ்நாடு பக்கம் திரும்பிய ஸ்ரீரெட்டி, பிரபல இயக்குனர் முருகதாஸ் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அடுத்ததாக நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் மீது தற்போது பாலியல் புகார் அளித்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர்,
சினிமாத்துறையில் நல்லவர்களும் உள்ளனர், சில மோசமானவர்களும் உள்ளனர். பாலியல் புகார் கூறுவது ஸ்ரீரெட்டியின் உரிமை. அந்த புகார்கள் குறித்து புகாருக்கு ஆளானவர்கள் தான் பதில் அளிக்க வேண்டும்.
நான் சினிமாவில் 1979-80ல் என்ட்ரி ஆகினேன். ஒரு கதாநாயகியைக் கூட தொட்டு நடித்ததில்லை. நடிகைகளுக்கு டயலாக் சொல்லிக்கொடுக்கும்போதுகூட தொட்டு சொல்லிக்கொடுத்தது கிடையாது. நான் தனிமனித ஒழுக்கத்துடன் வாழ்ந்திருக்கிறேன். என் மேல எந்த கிசுகிசுவும் வந்தது இல்லை.
புகார் சொல்லுவது உரிமை. புகாருக்கு ஆளானவர்கள் பதில் சொல்ல சொல்லுங்கள். அவர்களுக்கு வாய் இல்லையா? அவர்களுக்கு மைக் இல்லையா? என்னிடம் கேட்க வேண்டிய கேள்வியை அவர்களிடம் கேளுங்கள் என்றார்.