Skip to main content

குழந்தைகளை மூளைக் காய்ச்சல் நோயிலிருந்து பாதுகாக்க சிறப்பு தடுப்பூசி முகாம்..!

Published on 24/07/2021 | Edited on 24/07/2021

 

Special vaccination camp to protect children from meningitis ..!

 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நலப் பிரிவில், நியூமோகாக்கள் நிமோனியா, மூளைக் காய்ச்சல் ஆகிய நோயிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது. 

 

இந்தத் தடுப்பூசி முகாமில் குழந்தைகள் நலப் பிரிவு துறைத்தலைவர் மருத்துவர் ராமநாதன் தலைமை தாங்கினார். இந்தத் தடுப்பூசி முகாமில் சிதம்பரம் சப் கலெக்டர் மதுபாலன், அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர், நிர்வாகக் குழு உறுப்பினர் சீனிவாசன், பதிவாளர் ஞானதேவன், மருத்துவமனை கண்காணிப்பாளர் லாவண்யா குமாரி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர்.

 

நியூமோகாக்கள் கான்ஜீகேட் என்ற தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டு, குழந்தைகளுக்குப் போடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் ஜெயஸ்ரீ, துறைத்தலைவர் கல்யாணி, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி பாரி, அறுவை சிகிச்சைத் துறை பேராசிரியர் ஜூனியர் சுந்தரேஷ், செவிலியர்கள், மருத்துவக் கல்லூரி ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்