Skip to main content

உயரும் கரோனா பாதிப்பு!!! தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ரத்து!!

Published on 27/06/2020 | Edited on 27/06/2020
Special trains canceled in Tamil Nadu

 

தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத எண்ணிக்கையாக 3,713 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக இதுவரை 78,335 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் மொத்த பாதிப்பு 51,699 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையானது 1,025 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 28-வது நாளாக இரட்டை இலக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை பதிவாகி வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு 68 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். சென்னை அல்லாத பிற மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் ஜூலை 15ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சிறப்பு ரயில்களை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருச்சி- செங்கல்பட்டு, மதுரை- விழுப்புரம், கோவை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. கோவை- மயிலாடுதுறை, திருச்சி- நாகர்கோவில், கோவை- காட்பாடி சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. சிறப்பு முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழு தொகையையும் திருப்பி அளிக்கப்படும். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து டெல்லி செல்லும் ராஜஸ்தானி சிறப்பு ரயில் அட்டவணை படி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்