புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் அருகே தாய் மற்றும் தந்தையை பெற்ற மகனே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் அருகேயுள்ள நாட்டியன்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி. அவரது மனைவி வள்ளி. ரங்கசாமி - வள்ளி தம்பதிக்கு பாலு என்ற மகன் உள்ளார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த பாலு ஆறு மாதத்திற்கு முன்பு சொந்த ஊர் திரும்பியுள்ளார். இந்த நிலையில், ரங்கசாமி, வள்ளி இருவரும் வீட்டில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரது சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர், மகன் பாலுவிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. தன்னுடைய பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி பாலு தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், அவரது கோரிக்கைக்கு பெற்றோர் செவிமடுக்கவில்லை . இதனால் ஆத்திரமடைந்த பாலு தாய், மற்றும் தந்தையை வீட்டில் வைத்தே கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். இதையடுத்து, பாலுவை போலீசார் கைதுசெய்தனர்.