Skip to main content

சிறு வணிகர்களை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டப்பிரிவுக்கு உட்படுத்தக்கூடாது என கோரிக்கை

Published on 11/12/2017 | Edited on 11/12/2017
சிறு வணிகர்களை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டப்பிரிவுக்கு உட்படுத்தக்கூடாது என கோரிக்கை

சில்லரை வணிகத்தில் ஈடுபட்டு வரும் வியாபாரிகளை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டப்பிரிவுக்கு உட்படுத்தக்கூடாது என வலியுறுத்தி கோவையில் 50க்கும் மேற்பட்ட சிறு வணிகர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

முன்னதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமின் போது கோவை கணபதி வணிகர்கள் பாதுகாப்பு நலச்சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது ஏற்கனவே மாநகராட்சி உரிமம், தொழில் வரி, தராசு வரி, உணவு தானியங்கள் விற்பனை செய்யும் உரிமம் என பல வகை உரிமங்கள் பெற்று வைத்துள்ளதாகவும் தற்போது மத்திய அரசின் fssai உரிமத்திற்காக சில்லரை விற்பனையாளர்கள் 2000 ரூபாய் செலுத்தி சான்று பெற வேண்டும் என அரசு அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல எனவும் அவர்கள் கூறினர். இந்த சட்டத்தை தாங்கள் வரவேற்பதாகவும் அதே வேளையில் மாதம், தினசரி நானூறு ரூபாய் சம்பாதிக்கும் சிறு வணிகர்கர்களுக்கு இந்த தொகையை குறைத்து 100 ரூபாய் மட்டுமே வசூலித்து சான்று அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

அருள்

சார்ந்த செய்திகள்