Published on 04/10/2024 | Edited on 04/10/2024














முழு நேர அரசியலுக்கு முன்பு விஜய் நடிக்கும் கடைசி படமான அவரது 69வது படம் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. அ.வினோத் இயக்கும் இப்படத்தை தெலுங்கு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாலிவுட் நடிகர் பாபி தியோல், மலையாள இளம் நடிகை மமிதா பைஜூ, கௌதம் மேனன், பிரியாமணி, நரேன் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்க கமிட்டாகியுள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படம் அரசியல் கதைக்களமாக உருவாகுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. பூஜை நிகழ்ச்சியில் விஜய் வேஷ்டி சட்டை அணிந்து வந்தார். மேலும் பூஜா ஹெக்டே, வினோத், பாபி தியோல், மமிதா பைஜூ, நரேன் என படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.