தமிழகம் முழுவதும் கரோனோ பீதியில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வந்தவர்களால் தான் இந்த வைரஸ் அதிகம் பரவி வருகிறது என்பதை உணர்ந்த அந்த அந்த மாநில நிர்வாகம் தன் மாநிலத்திற்குள் கடந்த 2 மாதங்களாக வெளிநாட்டிற்கு சென்று வந்தவர்களின் பட்டியலை தயார் செய்து அவர்களை தேடி கண்டுபிடித்து தனிமைப்படும் பணியில் வேகமாக செயல்படுத்தி வருகிறார்கள்.
சமீபத்தில் புதுக்கோட்டையை அடுத்த பனியம்பட்டி வடகாட்டை சேர்ந்த சக்தி கண்ணன் என்பவர் கடந்த மார்ச் 22ம் தேதி சிங்கபூரிலிருந்து திருச்சி வந்திருக்கிறார். ஆனால் வீடு திரும்ப வில்லை. விமானநிலையத்தில் இருந்து வந்த தகவலின் அடிப்படையில் சக்திகண்ணனை தேடி புதுக்கோட்டை மாவட்ட சுகாதரா ஊழியர்கள் தேடி சென்ற போது வீட்டில் இல்லை என்பதை தெரிந்து கொண்டது அதிர்ச்சியடைந்தனர்.
சக்திகண்ணன் ஊர் திரும்பியதை அதிகாரிகள் மூலம் தெரிந்து கொண்ட பெற்றோர் அவரை தேட ஆரம்பித்து கடைசியில் தேடிக்கண்டுபிடித்து கொடுங்கள் என போலீசிடம் புகார் செய்திருக்கிறார்கள். இதனால் சக்திகணேசனை தேடும் படலம் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கண்டோன்மென்ட் போலீசார் வழக்கம் போல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது அப்போது ஒரு இளைஞன் சிவந்த கண்களுடன் தடுமாறியபடி நடந்து சென்று கொண்டு இருப்பதை பார்த்து தடுத்து விசாரித்த போது.. அவன் நான் மெடிக்கல் வந்தேன், மொபைல சார்ஜ் போடனும் என்று மாற்றி மாற்றி பேச சந்தேகம் அடைந்த போலீஸ் அவரை தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது.
அவர் மார்ச் 22ம் தேதி சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தாகவும், வீட்டிற்கு சொல்லாமல் திருச்சி ஜங்சன் – மத்திய பேருந்து நிலையம் சாலையில் உள்ள அபூர்வா விடுதியில் 503 எண் அறையில் தங்கி இருப்பதாவும் என்னுடைய நண்பர்கள் சிலருடன் சேர்ந்த தங்கியிருப்பதாக தகவல் சொல்லவும் அதிர்ச்சியடைந்த கண்டோன்மென்ட் போலீஸ் உடனே அவரை பிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் சொல்லி அவனுடைய பெற்றோருக்கும் தகவல் சொல்லியிருக்கிறார்கள்.
இதற்கு இடையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு அனைத்து விடுதிகளும், ஓட்டல்கள் கட்டாயம் மூடி சொல்லி உத்தரவு இருக்கும் நிலையில் திருச்சி அபூர்வா விடுதி எப்படி நடத்திக்கொண்டிருக்கிறார்கள், வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களை எப்படி தங்க வைத்திருக்கிறார்கள் என்பது குறித்து மாநகர போலீஸ் விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறது.