Skip to main content

“ராஜபக்சேவை வெற்றிபெறச் செய்யவே தொடர் குண்டுவெடிப்பு” - வெளியான பரபரப்பு தகவல்

Published on 06/09/2023 | Edited on 06/09/2023

 

Shocking information about the Easter incident in Sri Lanka

 

இலங்கையில் கோத்தபய ராஜபக்சோவை வெற்றிபெற வைக்கவே தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையின் போது தேவாலயத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் சுமார் 269 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பிற்கு ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாகக் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. 

 

இந்த நிலையில், குண்டு வெடிப்பின் மூலம் இலங்கையில் பதற்றத்தை உருவாக்கி, அதன் மூலம் கோத்தபய ராஜபக்சேவை தேர்தலில் வெற்றி பெறச் செய்வதே நோக்கம் எனத் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிய ஆசாத் மவுலானா என்பவர் சேனல் 4 என்ற தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துள்ளார். மேலும் இந்த குண்டு வெடிப்புக்கு இலங்கை உளவுத்துறையே காரணம் எனவும் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து உளவுத்துறை காரணமா? என்பது குறித்து விசாரிக்க இலங்கை அரசு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்