Skip to main content

குடும்பத் தகராறு; இரு குழந்தைகளுடன் தாய் எடுத்த அதிர்ச்சி முடிவு!

Published on 09/12/2024 | Edited on 09/12/2024
Shocking decision made by mother with two children due family dispute

கடலூர் மாவட்டம் மாளிகைபுர மேட்டுப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அழகப்பன் - நித்யா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் அண்மைக் காலமாகவே அழகப்பனுக்கும், நித்யாவிற்கு இடையே குடும்பத் தகராறு இருந்துவந்துள்ளது. இதனால் அடிக்கடி இருவருக்கும்  சண்டை ஏற்பட்டு சில நேரங்களில் கை கலப்பாகவும் மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த நித்யா, தன்னுடைய இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். கடும் மன வேதனைக்கு உள்ளான நித்யா அருகே இருந்த கிணற்றில் தனது இரு குழந்தைகளுடன் சேர்ந்து மூன்று பேரும் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

அவ்வழியாகச் சென்றவர்கள் கிணற்றிற்குள் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூவரின் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

சார்ந்த செய்திகள்