Published on 13/12/2019 | Edited on 13/12/2019
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதை தொடர்ந்து வேட்பு மனு தாக்கலும் தொடங்கி, நடைபெற்று வருகிறது.
![Seaman announce](http://image.nakkheeran.in/cdn/farfuture/jqW-zpF11puQ1UR3AZnRUsI3VlbSO-WecNDPL3EwE-w/1576239037/sites/default/files/inline-images/zzz9_1.jpg)
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியுள்ளது மாநில தேர்தல் ஆணையம். தற்போது சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சி போட்டியிடாத உள்ளாட்சி இடங்களே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருகிங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.