தேமுதிக தலைவர் விஜயகாந்தை சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமார் சந்தித்தார்.
சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் தேமுதிக கட்சி தலைவரும், நடிகருமான விஜயகாந்த் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் ,
நான் அமெரிக்காவிலேயே அவரை சந்திக்கலாம் என சொல்லியிருந்தேன் ஆனால் பார்க்கமுடியவில்லை. அதனால் தற்போது சந்தித்துள்ளேன். அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. இந்த சந்திப்பில் இன்றைய அரசியல் சூழ்நிலை பற்றி பேசினேன். என்னுடைய கருத்தை அவரிடம் பகிர்ந்துகொண்டேன் ஆனால் முடிவு அவர்தான் எடுக்கவேண்டும். நான் எந்த கட்சியுடனும் குழு அமைத்து கூட்டணி பேசவில்லை. நான் பேரம் பேசும் நபர் அல்ல. திட்டிக்கொள்பவர்கள் எல்லாம் ஒன்று சேரும் போதும் மனசாட்சி எப்படி ஒத்துப்போகிறது என்று தெரியவில்லை. சமத்துவ மக்கள் கட்சியின் தேர்தல் நிலைப்பாடு வரும் 5 ஆம் தேதி அறிவிக்கப்படும். அபிநந்தன் விடுதலையாகி வந்தது மகிழ்வை தருகிறது. நிர்பந்த சூழலிலும் எந்த ஒரு மனஉளைச்சலும் இன்றி அபிநந்தன் பதில் சொல்லும் காட்சிகளை பார்த்தோம். அவையெல்லாம் நாம் அவரிடம் இருந்து காத்துக்கொள்ளவேண்டிய ஒன்று எனக்கூறினார்.