Skip to main content

ஒரிசா டூ தேனி; குடியாத்தத்தில் சிக்கிய கஞ்சா

Published on 21/05/2024 | Edited on 21/05/2024
Orissa to Theni; drug trapped in the crime


ஒரிசாவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா பொட்டலங்களுடன் குடியாத்தத்தில் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரிசா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் நகர போலீசார் குடியாத்தம் ரயில்வே மேம்பாலம் அருகே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு அவர்களிடமிருந்த பைகளில் சோதனை செய்தபோது, அதில் 23 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் ஒரிசா மாநிலத்தில் இருந்து தேனிக்கு கஞ்சா கடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கஞ்சா கடத்தி வந்த திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (21) தேனி பகுதியைச் சேர்ந்த முகமது காலித் (32) ஆகிய இருவரை கைது செய்த குடியாத்தம் நகர போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட அபிஷேக் ஏற்கனவே கொலை வழக்கில் சிறைக்குச் சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்