Skip to main content

“என்னை முதல்வராக்கினால் உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லுவேன்” - சரத்குமார்

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

Sarathkumar has said that if I become cm I will tell you the secret of living up to 150 years

 

“2026 தேர்தலில் என்னை முதல்வராக்கினால் உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லுவேன்” என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். 

 

மதுரை பழங்காநத்தத்தில் நேற்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7வது பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். 

 

இந்த நிலையில் கூட்டத்தில் பேசிய சரத்குமார், “நாம் எதை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதையும், உங்கள் நாட்டாமை முதல்வராக வேண்டும் என்பதையும் தீர்மானத்தில் தெரிவித்துள்ளனர். அது நடக்குமா என்பது அடுத்த சட்டமன்ற தேர்தலில் தெரிய வரும்.  இந்த காலகட்டத்தில் பல்வேறு போதைகள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. 2025 ஆம் ஆண்டில் இளைஞர்கள் அதிகம் கொண்ட நாடாக இந்தியா இருக்கும். அதனால் மனித வளத்தைக் கெடுக்கும் நோக்கில் வெளிநாடுகள் செய்யும் சதிதான் இது.

 

நான் 70 வயதைத் தொடவுள்ளேன். ஆனால் இன்றும் 25 வயது இளைஞனாகத்தான் இருக்கிறேன். நான் இன்னும் 150 வயது வரை உயிரோடு இருப்பேன். அதற்கான வித்தையை கற்று வைத்துள்ளேன். அந்த ரகசியத்தை சொல்ல வேண்டுமென்றால், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் என்னை முதல்வர் அரியணையில் ஏற்றினால் சொல்வேன்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கைவிரித்த பா.ஜ.க.! எதிர்த்து களம் இறங்கும் வேட்பாளர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
BJP leader is contesting against Radhika in Virudhunagar

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், தமிழ்நாட்டிற்கு முதல்கட்டமான ஏப்ரல் 19ம் தேதியே வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள், வேட்பாளர்கள், தேர்தல் அறிக்கை எல்லாம் முடிந்து கட்சியின் தலைவர்கள் தங்கள் கட்சியின் வேட்பாளர்களையும், கூட்டணி கட்சியின் வேட்பாளர்களையும் ஆதரித்து வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டிவருகின்றனர்.

இந்த தேர்தலில் அதிமுகவில் இருந்து விலகிய பாஜக, தன்னுடைய தலைமையில், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், தமாக, அமமுக, பாமக, சமத்துவ மக்கள் கட்சி,  புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைத்துள்ளது.

BJP leader is contesting against Radhika in Virudhunagar

காமராஜர் போல மோடி ஆட்சி செய்வதாக கூறிய சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைப்பதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பாஜக கூட்டணியில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி ராதிகா சரத்குமாருக்கு ஒதுக்கப்பட்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்த ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த மருத்துவர் வேதா என்பவர் விருதுநகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ம.வீரப்பட்டியைச் சேர்ந்தவர் டாக்டர் வேதா. இவர் மதுரை மேற்கு மாவட்ட விவசாயி அணி மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு பாஜக சார்பாக போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், பாஜக தலைமை விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு நடிகர் சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகாவை விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவித்தது. இதனால் விரக்தியடைந்த பாஜகவைச் சேர்ந்த டாக்டர் வேதா  சுயேட்சையாக தனது வேட்புமனுவை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் தாக்கல் செய்தார்.

Next Story

'பாரத் மாதா கி ஜெ'- பாஜக மேடையில் முழங்கிய சரத்குமார்

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
'Family monarch rule is happening in Tamil Nadu' - Sarathkumar speech

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்று அல்லது நாளை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரிக்கு பிரதமர் வந்துள்ளார். அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து சாலை மார்க்கமாக விவேகானந்தர் கல்லூரிக்கு வந்த அவர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.இந்த கூட்டத்தில் அண்மையில் பாஜகவில் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்த நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் பலரும்  கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய நடிகர் சரத்குமார், ''57 ஆண்டுகள் தமிழகத்தில் இந்த திராவிட கட்சிகள் ஆட்சி செய்தன. அது என்ன திராவிடம் என்று புரியவில்லை. நான் ஒரு சில அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருந்தேன். திராவிடத்தை புரிந்து கொள்ளாமல் திராவிடம் திராவிடம் என்று சொல்லி ஒரு குடும்ப அரசியலும், மன்னர் ஆட்சியும் தான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சாதாரண தொண்டன், ஏழை எளிய தொண்டன் நாட்டுக்காக சேவை செய்ய வேண்டும் என்று வருவதற்கு, ஒரு தலைவன் ஆவதற்கு, ஒரு பதவியில் அமர்வதற்கு வாய்ப்பு இல்லாத இடத்தில் கையை கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

பிரதமரை பற்றி நான் நெல்லையில் நடந்த கூட்டத்திலேயே சொன்னேன். இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தில் இந்தியாவின் பெருமையை ஒரு தலைவன் எடுத்துச் சென்றிருக்கிறான் என்றால் அது பிரதமர் மோடி தான். அவருடைய வாழ்க்கை வரலாறு தெரியாதவர்கள் பேசிக் கொண்டிருக்கலாம். ஒரு சிறந்த தலைவரை நாம் அடையாளம் காட்ட வேண்டும். ஒரு சிறந்த தலைவனுக்கு உழைப்பு இருக்க வேண்டும், உறுதி இருக்க வேண்டும், நியாயம் இருக்க வேண்டும், தர்மம் இருக்க வேண்டும், செயல்பாடுகள் சிறப்பாக இருக்க வேண்டும்'' என்றார். தொடர்ந்து பேசிய அவர் பேச்சின் இறுதியில் ‘பாரத் மாதா கி ஜெ’ என மூன்று முறை முழங்கி தனது உரையை நிறைவு செய்தார்