துறையூர் தாலுகாவில் உள்ளது சிக்கத்தம்பூர். இங்குள்ள ஏரியில் சவுடு மண் விவசாயிகள் நிலத்தை செம்படுத்துவதற்காவும், விவசாயத்தை பெருக்குவதற்காகவும், தங்கள் உபயோகத்திற்கு எடுத்துக்கொள்ளலாம் என தாசில்தார் ரவிசங்கர் அனுமதி வழங்கியிருந்தார்.
இதனால் அந்த பகுதி விவசாய குடிமக்கள் டிராக்டரில், மாட்டு வண்டியில் சவுடு மண் எடுத்து தங்கள் நிலத்தை செம்மை படுத்திக்கொண்டிருந்தனர். ஆனால் அதே ஏரியாவில் இருக்கும் கே.ஆர்.டி. லாரி முதலாளி தன்னுடைய ஒரு லாரிக்கு தவுட்டு மணல் எடுக்க அனுமதி வாங்கி விட்டு ஆழமாக தோண்டி அதன் கீழ் உள்ள செம்மண்ணையும் அதற்கு கீழே உள்ள மணலை எடுத்து ஒரு லோடு ரூ.10 ஆயிரத்திற்கும் மேல் விற்பனை செய்து வந்தார். செம்மண்ணை செங்கற்சூலைக்கு 3,000 முதல் 5,000 விற்பனை செய்கிறார்கள்.
சொந்த பயன்பாட்டிற்காக என்று அனுமதி வாங்கிவிட்டு லாரியை வைத்து தொடர்ச்சியாக மணல் எடுப்பதை கண்டித்த கிராமத்து மக்கள், லாரி முதலாளி கே.ஆர்.டி மணலை எடுத்து அதிகவிலைக்கு விற்பதால் எல்லோரும் பாதிக்கப்படுகிறோம் என்ற மணலை சேமித்து வைத்திருக்கும் இடத்திலிருந்து மணலை எடுக்க விடாமல் தடுத்தனர்.
ஆனால் அந்த லாரி முதலாளியே நாங்க வருவாய்துறைக்கு லோக்கல் போலிஸ் எஸ்.ஐ. ராஜேஸ், எஸ்.பி.ஏட்டு ரவி உள்ளிட்ட எல்லோருக்கும் தினமும் 5,000 கப்பம் கட்டுறோம். உங்களால தடுக்க முடியாது என்று இரண்டு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. முடிஞ்சா தடுத்து பாரு என்று பிரச்சனை பெரிசானது.
இது பற்றி விசாரிக்க புதிதாக வந்த வருவாய் துறை ஊழியரையும் சிறை பிடித்து வைத்தனர். தகவல் அறிந்த வருவாய் துறையினர் மற்றும் உப்பிலியபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
போலீசாருக்கு மாமூல் தருவதாக லாரி உரிமையாளர் சொல்லி பிரச்சனை பண்ணியதால் போலீசாரை பார்த்ததும் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து ஆவேசமாக பேச அதிர்ச்சியடைந்த உப்பிலபுரம் போலிஸ் தப்பித்தால் போதும் என அந்த இடத்தை விட்டு நைசாக நழுவி சென்றனர்.
இனி இந்த பகுதியில் மணல் கடத்த விடமாட்டோம் என்று வருவாய் துறையினர் உறுதி அளித்த பின்னரே கிராம மக்கள் கலைந்து சென்றனர்.