சேலம் மக்களவை தொகுதி நெசவாளர்கள் , வெள்ளி வியாபாரிகள் நிறைந்த ஒரு மாவட்டம் நம் சேலம் மாவட்டம். இந்த தொகுதியின் தற்போதைய மக்களவை உறுப்பினராக அதிமுகவை சேர்ந்த வி. பன்னீர்செல்வம் உள்ளார். இவர் 2014-2019 ஆண்டுகளில் தனது தொகுதிக்கு சென்று மக்களை ஒரு முறைக்கூட சந்திக்கவில்லை என்பது முற்றிலும் உண்மை.தொகுதி வளர்ச்சி நிதி வந்தது ! ஆனால் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை! சேலம் மாநகரில் மக்கள் வசிக்கும் இடங்களில் சாக்கடை வசதிகள் மற்றும் சாலை வசதிகள் அறவே இல்லை. மேலும் சில பகுதிகளில் தேர்தலுக்காக தார் சாலைகள் அமைத்து வருகின்றனர்.
மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் தவிர சேலம் மாநகரில் எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. சேலத்தில் நெசவாளர்கள் அதிகம் என்பதால் இப்பகுதியில் ஜவுளி பூங்கா மற்றும் பாரம்பரிய கைத்தறி நெசவாளர் பூங்கா வேண்டும் என்பதே சேலம் மாநகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. மேலும் சேலம் மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்தார்.ஆனால் சேலம் மாநகரில் இருந்து 5km தொலைவில் டால்மியா போர்ட் என்ற பகுதியில் தகவல் தொழில் நுட்ப பூங்கா மூன்று சிறிய IT நிறுவனங்களை கொண்டு மட்டுமே இயங்கி வருகிறது. மேலும் சேலம் மாவட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித்தர சேலம் மக்களவை உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் தவறிவிட்டார். சேலம் மாநகரில் சாலை வசதிகள் இன்றி தவிக்கும் மக்களுக்கு சாலைகளை அமைத்து தர தவறிவிட்டார். சேலம் உருக்காலை நஷ்டத்தில் இயங்குவதால் தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்த நிலையில் அது குறித்து சமந்தப்பட்ட மத்திய அமைச்சரை சந்திக்க சேலம் மக்களவை உறுப்பினர் தவறிவிட்டார்.
சேலம் மக்களவை தொகுதிக்கு வளர்ச்சி நிதியாக மத்திய அரசு எவ்வளவு ரூபாய் ஒதுக்கியது 2014-2019 ?
சேலம் மக்களவை தொகுதிக்கு உறுப்பினர் எவ்வளவு ரூபாய் செலவழித்தார் என்பது குறித்த முழுமையான கேள்விகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பினோம். இதற்கு தகவல் தொடர்பு ஆணையர் அளித்துள்ள பதிலில் சேலம் மக்களவை தொகுதிக்கு மட்டும் சுமார் 25 கோடியை மத்திய அரசு ஐந்து ஆண்டுகளில் ஒதுக்கியுள்ளது.
சேலம் மக்களவை உறுப்பினர் பரிந்துரைத்த செயல் திட்டம் = 364
மத்திய அரசு ஏற்றுக்கொண்ட திட்டப்பணிகள் = 355.
இதில் நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகள் = 317.
மத்திய அரசு ஒதுக்கிய நிதி- 2500 லட்சம்.
செலவு செய்யாமல் உள்ள நிதி : 478.13 லட்சமாக உள்ளது.
மத்திய அரசு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தொழில் வளர்ச்சி உள்ளிட்டவை ஏற்படுத்த கோடி கோடியாய் நிதி வழங்கி வரும் நிலையில் சேலம் மக்களவை உறுப்பினர் இதற்கான நிதியை கொண்டு வேலை வாய்ப்பு ஏற்படுத்தாதது ஏன் ? சாலை மற்றும் சாக்கடை வசதிகள் செய்து தராதது ஏன் ? ஏரியை தூர்வாராதது ஏன்? என சேலம் மாநகர மக்கள் கேள்வி எழுப்பினார்கள்.
பி. சந்தோஷ் , சேலம் .