Published on 05/11/2020 | Edited on 05/11/2020
![salem district mettur dam water level](http://image.nakkheeran.in/cdn/farfuture/kouzHS2z6udby36ohuf4MPEHqvFwTJMqZodoMAcnwn4/1604545198/sites/default/files/inline-images/mettur%20%281%29_25.jpg)
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று (05/11/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,220 கனஅடியில் இருந்து 5,972 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.37 அடியாகவும், நீர் இருப்பு 60.23 டி.எம்.சியாகவும் இருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 18,000 கனஅடி; கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்க்கு வினாடிக்கு 900 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
இதனிடையே, காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து வினாடிக்கு 7,000 கனஅடியில் இருந்து 8,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.