Published on 15/12/2018 | Edited on 15/12/2018
![storm](http://image.nakkheeran.in/cdn/farfuture/hnqQVcWljeQxyXpvNSUWWjS_63HOE4oItvXryPdP8Io/1544908228/sites/default/files/inline-images/BNV.jpg)
வங்கக் கடலில் உருவாகி இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ''பெய்ட்டி'' என பெயரிடப்பட்டுள்ளது. காக்கிநாடா ஓங்கோல் இடையே டிசம்பர் 17ஆம் தேதி இந்த புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் காரணமாக வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும். குறிப்பாக வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். வட தமிழக கடலோரப் பகுதியில் ஒரு சில இடங்களில் மழையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.