Published on 25/11/2019 | Edited on 25/11/2019
உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட கோரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செ.கு.தமிழரசன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் பெண்கள், பட்டியிலனத்தவர்கள், பழங்குடியினருக்கு மறைமுகத் தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும். இடஒதுக்கீடு தொடர்பாக சட்டம் கொண்டு வரலாம் என 2012 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
![tamilnadu local body election quota c k thamizharasan high court](http://image.nakkheeran.in/cdn/farfuture/oNJKlP3H_ZIHItBbpmoGLCRZVkLjZa3CEyOosINWNG4/1574701566/sites/default/files/inline-images/Chennai_High_Court%202222222222_0.jpg)
உள்ளாட்சி அமைப்புகளில் பட்டியிலனத்தவர்கள், பழங்குடியினருக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை. துணை மேயர், துணை தலைவர் பதவிகளுக்கு இட ஒதுக்கீடு தந்தால் பெண்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். துணை மேயர், துணை தலைவர் பதவிகளுக்கு இட ஒதுக்கீடுகோரி மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.