Published on 10/09/2020 | Edited on 10/09/2020
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று (10/09/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 8,563 கன அடியில் இருந்து 8,830 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.66 அடியாகவும், நீர் இருப்பு 54.56 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது.
காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 6,000 கன அடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 700 கன அடியும் நீர் திறக்கப்படுகிறது.
இதனிடையே, காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,700 கன அடியில் இருந்து 10,000 கன அடியாக அதிகரித்துள்ளது.