!["Rs 50 lakh compensation should be given to the family of a transport worker who died due to corona infection ...](http://image.nakkheeran.in/cdn/farfuture/bxNdROncnduU8qdQCQbAd_DTCSDEItswUPpqWnWDCYE/1604062559/sites/default/files/inline-images/corona-2_1.jpg)
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஈரோடு மண்டலம் தேசிய தொழிலாளர்கள் சங்கமான ஐ.என்.டி.யூ.சி.யின் செயற்குழுக் கூட்டம் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நிர்வாக தலைவர் ரவி தலைமை தாங்கினார். பேரவைச் செயலாளர் அய்யப்பன், துணைத் தலைவர் ரவி மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், "போக்குவரத்து பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள அனைத்து பணப் பலன்களையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 40 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்.
கரோனா வைரஸ் நோயால் உயிரிழந்த அனைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்திற்கும் அரசு இழப்பீடு தொகையாக ரூபாய் 50 லட்சம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத்தை திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை நிறுத்த வேண்டும். உயிர் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் பணிபுரியும் ஓட்டுநர்கள் நடத்துனர்கள் டீசல் வசூல் கேட்டு தொழிலாளர்களை நிர்ப்பந்தம் செய்யக் கூடாது" உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.