Published on 06/02/2019 | Edited on 06/02/2019
![Road Safety Awareness Rally](http://image.nakkheeran.in/cdn/farfuture/7fWpObTUga5LYV4D7Z7QtaF9CectdCTSqM31IxtWbXk/1549452660/sites/default/files/inline-images/Road%20Safety%20Awareness%20Rally.jpg)
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு சாலை பாதுகாப்பு மற்றும் தலைகவச விழிப்புணர்வு பேரணி 04.02.2019 ந் தேதி காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. இவ்விழாவில் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பரமணியன் கலந்து கொண்டு தலைகவச பேரணியை துவக்கி வைத்தார். மேலும் வட்டார போக்கு வரத்து அலுவலர் பாலகுருநாதன், முகமது நாசர் மற்றும் விக்கிரவாண்டி சுங்கசாவடி மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியில் சுமார் 350 பேர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் 50 நபர்களுக்கு இலவசமாக தலைகவசம் வழங்கப்பட்டது. மேலும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.