Published on 11/06/2021 | Edited on 11/06/2021

கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துவருகிறது. இந்நிலையில், இன்று (11.06.2021) சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 25 காசுகள் அதிகரித்து, 97 ரூபாய் 19 காசுகளாக விற்பனையாகிறது. அதேபோல் டீசல் லிட்டருக்கு 27 காசுகள் உயர்ந்து 91 ரூபாய் 42 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்கனவே நாட்டின் சில பகுதிகளில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டிலும் அதே நிலையை நோக்கி நகர்ந்துவருவது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் பல இடங்களில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோட்டையூரில் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.