Skip to main content

''எந்த புள்ளியாக இருந்தாலும் சரி... கருப்பு ஆடுகள் களையெடுக்கப்படும்'' -அமைச்சர் ஜெயக்குமார்

Published on 29/01/2020 | Edited on 29/01/2020

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகி இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிபிசிஐடி போலீசார் இந்த முறைகேடு குறித்து விசாரித்து வருகின்றனர். இன்று மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தற்போதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம்  சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த முறைகேடு தொடர்பாக பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயகுமார், தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,

 

black goats will be weeded' - Minister Jayakumar

 

இந்த விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் சிறுபுள்ளியாக இருந்தாலும் சரி, பெரும் புள்ளியாக இருந்தாலும் சரி, கரும்புள்ளியாக இருந்தாலும் சரி, எந்த புள்ளியாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் அது கருப்பு ஆடுதான். சமுதாயத்திற்கு ஏற்றுக்கொள்ளமுடியாத அந்த கருப்பு ஆடுகள் நிச்சயம் களையெடுக்கப்படும்.

அரசு அத்தனை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இளைஞர்களும், தேர்வர்களும் எதிர்காலம் கொண்டு பயம்கொள்ள தேவையில்லை. ஒருசில சென்டரில் முறைகேடு நடந்திருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது. ஒரு சில மையங்களில் நடந்த முறைகேட்டிற்காக ஒட்டுமொத்த டிஎன்பிஎஸ்சி மீதும் குற்றம் சொல்ல முடியாது. எந்த ஓட்டையும் இல்லாமல் வருங்காலங்களில் தேர்வு நடத்தப்படும். 

தேர்வு எழுதிய அனைவரது விடைத்தாளும்  ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. எனவே தவறு செய்தவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வை ரத்து செய்து முறைகேட்டில் ஈடுபட்ட ஒருசிலருக்காக தேர்வர்கள் அனைவரையும் தண்டிக்க முடியாது. 

ஒரிசாவில் புற்றீசல் மாதிரி தேவையற்ற கோச்சிங் சென்டர் மற்றும் முறைகேட்டை தடுக்க தனியாக ஒரு சட்டமே இயற்றியுள்ளனர். அதேமாதிரியான சட்டத்தை மாடலாக வைத்து இங்கு ஒரு சட்டத்தை கொண்டுவர அரசு ஆலோசித்து வருகிறது. வருகின்ற கூட்டத்தொடரில் அரசு மசோதா கொண்டுவர ஆலோசித்து வருகிறது.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

காமராஜர் பிறந்த மாவட்டத்திலும் காலை உணவுத் திட்ட தொடக்க விழா! அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு!

Published on 15/07/2024 | Edited on 15/07/2024

 

உலகிற்கே முன்னோடி திட்டமாக அமைந்துள்ளதாகக் கூறப்படும்  முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை,  பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில், திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்திலுள்ள புனித அன்னாள் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதனைத் தொடர்ந்து, இத்திட்டத்தினை விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், கல்லூரணி எஸ்.பி.கே. தொடக்கப்பள்ளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு துவங்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்தினார்.

பெருந்தலைவர் காமராஜரின் 122வது பிறந்ததினத்தை முன்னிட்டு, விருதுநகர் மதுரை சாலையிலுள்ள காமராஜர் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில், அன்னாரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும், தக்கம் தென்னரசுவும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்வில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப.,   விருதுநகர் எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், விருதுநகர் நகர்மன்றத் தலைவர் மாதவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ராஜபாளையம் தொகுதியிலும் தளவாய்புரம் ஊராட்சி பு.மூ.மா.அம்மையப்ப நாடார் ஆரம்பப் பள்ளி மற்றும் கிருஷ்ணாபுரம் பெருந்தலைவர் காமராஜர் இந்து நாடார் தொடக்கப்பள்ளி போன்ற பள்ளிகளில், ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் தொடங்கிவைத்து, குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவைச் சாப்பிட்டார். ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள காமராஜர் திருவுருவச் சிலைக்கு தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாகர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டத்திலும் அவருடைய பிறந்தநாள் விழா மற்றும் காலை உணவுத்திட்டத்தின் தொடக்க விழாவை சிறப்புடன் நடத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ. போன்ற மக்கள் பிரதிநிதிகள் கர்மவீரருக்கு புகழ் சேர்த்துள்ளனர். 

Next Story

“தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது” - கர்நாடக முதல்வர் திட்டவட்டம்

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
Karnataka  refusal to open water to Tamil Nadu

தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 1 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தலைமையில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து, தமிழகத்திற்குத் தண்ணீர் தரவே முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, “காவிரி பாசனப் பகுதியில் 28 சதவீதம் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. கர்நாடகாவின் வலியுறுத்தலை மீறி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் பற்றாக்குறை இருப்பதால் தற்போதைக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட  முடியாது” என்று தெரிவித்தார். மேலும் இது குறித்து ஆலோசனை நடத்தக் கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சியினருக்கும் முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.