Published on 12/05/2020 | Edited on 12/05/2020

தமிழகத்தில் வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரியலூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லையில் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 48 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி மற்றும் நாகையில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருச்சி, கரூர், சேலம் தருமபுரியில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளது, சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.