2019-ம் ஆண்டு மார்ச் மாதம் பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
தேர்வு எழுதிய மாணவர்கள் அவர்களின் தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in http:/www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in http:/www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, http:/www.dge2.tn.nic.in ஆகிய மூன்று இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம். அதுமட்டுமின்றி மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளில் வழியாக பதிவு செய்த கைபேசி எண்ணிற்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும் எனும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது பதிவு செய்த கைபேசி எண்ணிற்கு முடிவுகள் அனுப்பப்படும். ஏப்ரல் 20-ம் தேதி முதல் 26-ம் தேதிவரை அவர்கள் பயின்ற பள்ளிகளில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24-ம் தேதி முதல் 26-ம் தேதிவரை www.dge.tn.nic.in http:/www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் அவர்களாகவும் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.