ஆறாத வடுக்களையும் தீராத வேதனையும் தந்து குமாி மாவட்டத்தை புரட்டி போட்ட ஓகி புயலின் ருத்ர தாண்டவம் நடந்து இன்று ஓராண்டு நிறைவு பெறுகிறது.
கடந்த ஆண்டு நவம்பா் 29-ம் தேதி இதே நாளில் நள்ளீரவு வீசிய ஓகி புயல் மற்றும் இடைவிடாத மழையால் குமாி மாவட்டம் முமுவதும் நிலைக்குலைந்து போனது. இந்தியா வானிலை அறிக்கையின் தகவலை முன் கூட்டியே தமிழக அரசு தொிவிக்காததால் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மீனவா்களை ஓகி புயல் சுருட்டி கடலில் திசைமாறி தூக்கி வீசியது. இதில் மீனவா்கள் படகுகளையும், துடுப்புகளையும் இழந்து கடலில் உயிருக்கு போராடி தத்தளித்தனா்.
சில மீனவா்கள் நள்ளீரவில் எதிா் நீச்சல் போட்டும் கையில் கிடைத்த மரத்துண்டுகள் மற்றும் தண்ணீா் கேன்களையும் பிடித்து மிதந்தபடி காற்று மற்றும் அலை அடித்து சென்ற திசைக்கு சென்று ஐந்தாறு நாட்கள் தொடா்ந்து கடலில் நீந்தி மும்பை மற்றும் ஓடிசா மாநில கடற்கரையில் சில மீனவா்கள் கரையேறினாா்கள்.
நூற்றுக்கு மேற்பட்ட மீனவா்கள் கடலில் செத்து மிதந்தனா். இந்தியா கடற்படையும் தமிழக கடலோர காவல்படையும் மீனவா்களை தேடி கண்டுபிடிப்பதற்கு பதில் சக மீனவா்களே பல நாட்டிங் கல் மைல் தூரத்திற்கு சென்று நடுக்கடலில் இறந்து மிதந்து கொண்டிருந்த மீனவா்களின் பலரது உடல்களையும் அதேப்போல் உயிருக்கு போராடி தத்தளித்து கொண்டிருந்த பல மீனவா்களையும் மீட்டு வந்தனா்.
இதேபோல் பல ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் அழிந்தன. லட்ச கணக்கான தென்னை மரங்கள், வாழைகள், ரப்பா், மற்றும் பல்வேறு வகையான மரங்கள் முறிந்து விழுந்தன. பல பாலங்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. ஆறுகளும், குளங்களும் மூழ்கி உடைப்பு ஏற்பட்டு மாவட்டம் முமுவதும் வெள்ளகாடானது. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி தரைமட்டமானது. இதில் 25 போ் உயிாிழந்தனா்.
மேலும் மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மின் கோபுரங்கள் முறிந்து விழுந்ததால் 10 நாட்களாக மின்சாரம் இன்றி மாவட்டம் இருளில் மூழ்கியது. உணவுமின்றி இருப்பிட வசதியுமின்றி ஆயிரக்கணக்கான மக்கள் பாிதவித்தனா். இதேபோல் சுகாதாரம் சாியான முறையில் பேணாததால் நோய்களும் பரவியது.
இந்தநிலையில்தான் புயல் வீசி சென்ற 13 ஆவதுநாளில் மக்களின் பல்வேறு போராட்டத்திற்கு பிறகு முதல்வா் தூத்தூா் மீனவ கிராமத்திற்கு வந்தாா். அதன் பிறகு 20 நாட்கள் கழிந்து பிரதமா் மோடி கன்னியாகுமாி வந்து பாதிகப்பட்ட மீனவா்கள் சிலரை மட்டும் சந்திந்தாா்.
இந்த நிலையில் தமிழக அரசு ஓகி புயலில் இறந்த மீனவா்களுக்கு 10 லட்சம் அறிவித்தது. ஆனால் கேரளா அரசு அந்த மாநில மீனவா்களுக்கு 25 லட்சமும் அரசு வேலையும் என அிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த குமாி மீனவா்கள் கேரளா அரசை போன்று நிவாரண நிதி தரவேண்டும் என்று தொடா் போராடடத்தில் ஈடுபட்டனா். ஆனால் அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை.
இந்தநிலையில் குழித்துறையில் ஆயிரக்கணக்கான மீனவா்கள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் திருவனந்தபுரத்தில் இருந்து குமாி சென்னைக்கு ரயில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து பேச்சுவாா்த்தைக்கு சென்ற அப்போதைய குமாி கலெக்டா் சஜ்ஜன் சிங் சவானை மீனவா்கள் 10 மணி நேரம் சிறை பிடித்து வைத்தனா் இதனால் பதட்டமான சூழ்நிலை உருவானதால் அரசு இறங்கி வந்து 20 லட்சமும் ஒருவருக்கு அரசு வேலையும் அறிவித்தது.
ஆனால் இறந்து போன விவசாயிகளுக்கு எந்த நிவாரண தொகையும் இதுவரையிலும் வழங்கவில்லை.
இந்த நிலையில் தான் தமிழக அரசு, மத்திய அரசிடம் ஓகி புயல் நிரந்தர சீரமைப்பு பணிகளுக்காக ரூ. 5255 கோடி கேட்டது. ஆனால் கேட்டதோடு தமிழக அரசும் மேற்கொண்டு அந்த நிதியை வாங்க எந்த முயற்சியும் மேற்கொள்ள வில்லை இதனால் மத்திய அரசும் இன்று வரை அந்த நிதியை ஒதுக்கவில்லை.
இதற்கிடையில் ஓகி புயலில் முமுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கிய 5ஆயிரம் ருபாய் அந்த வீடு மீது முறிந்து விழுந்த மரத்தை அகற்றுவதற்கு கூட போத வில்லை. அதேபோல் பல அரசு பள்ளிகளில் முறிந்து விழந்த மரங்கள் கூட இன்று வரை அகற்றப்படாமல் உள்ளன. முறிந்த மின்கம்பங்களுக்கு பதில் புதிதாக நட்ட மின் கம்பங்களில் இன்னும் மின் விளக்குகள் கூட பொருத்தவில்லை.
மேலும் புயலால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க தேசிய போிடா் நிதியில் இருந்து உடனடி நிவாரணமாக ரூ.747 கோடியும் வழங்க பாிசிலிக்க படுவதாக மத்திய அரசு கூறியதாக முதல்வா் அறிவித்தாா். ஆனால் இன்று வரை அந்த நிதி பாிசிலனையில்தான் இருக்கிறது. அதேபோல் உயிாிழந்த விவசாயிகளுக்கு 10 லட்சமும் ஊனமடைந்தவா்களுக்கு 5 லட்சமும் இதே போல் அழிந்த வாழைகளுக்கு ஹெக்டோ் ஒன்றுக்கு 2 லட்சத்து 50 ஆயிரமாகவும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு அறிவிப்பாக அப்படியே உள்ளது.
இந்த மாதிாி சூழ்நிலையில்தான் ஓகி பாதிப்பில் ஓராண்டாகியும் மக்கள் இன்னும் மீள முடியாத துயரத்தில் உள்ளனா். மத்திய மாநில அரசுகளை நம்பி, நம்பி தற்போது நம்பிக்கை இழந்து நிற்கதியாய் நிற்கின்றன. காலம்தான் இவா்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.