அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமை குறித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று தமிழக பாஜக மகளிர் சார்பில் அணி போராட்டம் மதுரையில் பேரணி நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் மதுரையில் நடைபெறும் பேரணிக்குச் செல்ல பாஜகவினர் முயன்று வருகின்றனர்.
பேரணியில் கலந்துகொள்ள பாஜக பிரமுகர் குஷ்பு வந்திருந்தார். முன்னதாக தடையை மீறி பேரணியில் ஈடுபட்ட பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குஷ்பு பேசுகையில், ''இந்த பேரணிக்கு அனுமதி கொடுப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. திமுக ஆட்சிக்கு எதிராக, திமுகவின் தவறான செயல்களை எதிர்த்து யார் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் எங்களுக்கு எங்குமே அனுமதி கொடுக்கப்படுவதில்லை. அதற்கு காரணம் எதைப் பேசினாலும் உண்மையை மட்டும் தான் பேசுவோம் என திமுகவிற்கும் நன்றாகவே தெரியும். எனவே அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள். என் மண்ணில், கண்ணகி பிறந்த தமிழ்நாட்டில் ஒரு பிரச்சனை என்றால் நான் வந்து நிற்பேன். நாங்கள் பேசுவதை இன்று மக்கள் காது கொடுத்துக் கேட்கிறார்கள். நாங்கள் சொல்வதை கேட்பதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள்'' என்றார்.
தொடர்ந்து பேரணியில் ஈடுபட முயன்ற குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்