Published on 18/12/2018 | Edited on 18/12/2018
திரைப்பட ஒப்பனைக்கலைஞரும், ஐ.என்.எ. சுதந்திரபோராட்ட தியாகியுமான எல். முத்தப்பா இன்று காலை 7.15 மணிக்கு காலமானார். அவரது இறுதி ஊர்வலம் நாளை மாலை 4 மணிக்கு வடபழனியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டு ஏவி.எம். இடுகாட்டில் நல்லடக்கம் நடைபெறுகிறது.
அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ஏராளமான திரைக்கலைஞர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை நேரில் வந்து முத்தப்பா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த முத்தப்பா எம். ஜி.ஆர்., சிவாஜி, ரஜினிகாந்த், கமலஹாசன், கன்னட ராஜ்குமார் போன்ற பிரபலமான முன்னணி கதாநாயகர்களுக்கு ஒப்பனைக்கலைஞராக பணியாற்றியவர். ஏவி.எம். நிறுவனத்தின் ஆஸ்த்தான ஒப்பனைக்கலைஞராக இருந்தவர் முத்தப்பா.