Published on 16/09/2018 | Edited on 16/09/2018
சென்னையில் இன்று மாலை 3.20 மணிக்கு மேல் திடீரென்று இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
அம்பத்தூர், ஆவடி, முகப்பேர், கோல்டன் பிளாஸ், கலெக்டர் நகர், அயப்பாக்கம், அன்னனூர், அத்திப்பட்டு, ஐசிஎப் காலணி, திருமங்கலம், வாவின், வானகரம், காட்டுப்பாக்கம், கீழ்ப்பாக்கம், புழல், மதுரவாயல், பூந்தமல்லி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணாசாலை, கோயம்பேடு, வடபழனி, திருவொற்றியூர், வளசரவாக்கம், ஐயப்பந்தாங்கல், தி.நகர், சைதாப்பேட்டை, ராயபுரம், பாரிமுனை, தண்டையார்பேட்டை, ரெட்டேரி, செங்குன்றம், எண்ணூர் ஆகிய பகுதிகளில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்தது.
30 நிமிடங்களுக்கு மேலாக நீடித்த மழையில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.