Skip to main content

ரகுபதி ஆணையம் கலைப்பு - சென்னை ஐகோர்ட் அதிரடி

Published on 03/08/2018 | Edited on 03/08/2018
ra

 

புதிய தலைமைச்செயலக கட்டிட முறைகேடு தொடர்பாக விசாரிக்க 2011ம் ஆண்டில் அமைக்கப்பட்ட ரகுபதி ஆணையத்தை சென்னை உயர்நீதிமன்றம் கலைத்தது.  வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் இன்று இந்த உத்தரவை பிறப்பித்தார்.

 

திமுக தலைவர் கலைஞர் முதல்வராக இருந்தபோது சென்னை ஒமந்தூரார் அரசினர் தோட்டத்தில், புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டப்பட்டது.  அதிமுக ஆட்சிக்கு வந்ததும் புதிய தலைமைச்செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடு என ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆர். ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தார் முதல்வராக இருந்த ஜெயலலிதா. புதிய தலைமைச்செயலக முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு கலைஞர், ஸ்டாலின், துரைமுருகனுக்கு சம்மன் அனுப்பியது விசாரணை  ஆணையம். 

 

 இந்த சம்மனை எதிர்த்து, ரகுபதி தலைமையிலான விசாரணை ஆணையத்திற்கு தடை விதிக்குமாறு கலைஞர், ஸ்டாலின், துரைமுருகன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.   வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 2015ல் ரகுபதி ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

 

இந்நிலையில், இவ்வழக்கு விசாரணையில், ரகுபதி ஆணையம் செயல்படுவதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டது.  3 ஆண்டுகள் முடங்கி கிடந்த ரகுபதி ஆணையத்திற்கு 2 கோடி செலவிட்டது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.  ரகுபதி, ஆறுமுகசாமி, ராஜேஷ்வரன், அருணா ஜெகதீசன், சிங்காரவேலு தலைமையில் ஆணையங்கள் உள்ளன.   ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு பங்களா ஒதுக்குவதால் அரசுக்கு வீண் செலவு ஏற்படுகிறது. ஆணையங்கள் செயல்பட ஒதுக்கப்பட்ட அரசு பங்களாக்களை காலி செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவில் தெரிவித்தார்.  

சார்ந்த செய்திகள்