
பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்திருந்த நிலையில், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானவை, குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் என் மீது வழக்கு தொடரலாம் என வீடியோ வாயிலாக தற்போது கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார்.
பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது மீடூ எனும் பிரச்சாரம் மூலம் பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக ஏற்கனேவ கவிஞர் வைரமுத்து அண்மையில் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில்,
''அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைகாலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன் அவற்றில் இதுவும் ஒன்று. உண்மைக்கு புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை ,உண்மையை காலம் சொல்லும்'' என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவர் இதுகுறித்து பதில் சொல்லவேண்டும் எனவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்ச்சைகள் கிளம்பியது.
இதனை அடுத்து இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,
என்மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் எல்லாம் முழுக்க முழுக்க பொய்யானவை. முற்றிலும் உள்நோக்கம் உடையவை. அவை உண்மையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் என் மீது வழக்கு தொடுக்கலாம் சந்திக்க காத்திருக்கிறேன். மூத்த வழக்கறிஞர்களோடும், அறிவுலக ஆன்றோர்களோடும் கடந்த ஒரு வாரகாலமாக ஆழ்ந்து ஆலோசித்து வந்தேன். அசைக்க முடியாத ஆதரங்களை திரட்டி வைத்துள்ளேன். வழக்கு போட்டால் சந்திக்க தயார். நான் நல்லவனா கெட்டவனா என நீதிமன்றம் சொல்லட்டும். நீதிக்கு தலைவணங்குகிறேன் என கூறியுள்ளார்.