உத்திரப் பிரதேசம், ஷாம்லி மாவட்டம், காஞ்சனா பகுதி, இஸ்லாம்பூர் குர்ஷித் கிராமத்தைச் சேர்ந்தவர் தம்சீர்கான் (27) இவர் தனது நண்பர்களுடன் பல்வேறு மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கு சென்று ஸ்டவ் விற்பனையி்ல் ஈடுபடுவது வழக்கம். நெல்லைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்திருந்த அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.

இதனால் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் உடல் நிலை மோசமடையவே, அவரது நண்பர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.

Mysterious fever in nellai? Intensive testing

Advertisment

Advertisment

ஆனால் காய்ச்சல் நீடித்ததுடன் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது. அதனால் அவரது ரத்தம் டெங்கு காய்ச்சல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் தம்சீர்கான் திடீரென்று இறந்தார்.

இது குறித்து அவரது நண்பர்கள் கூறுகையில் ”தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது அவருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருக்கலாம். என டாக்டர்கள் சந்தேகித்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் என்றனர்.

இது குறித்து நெல்லை அரசு மருத்துவமனை டாக்டர் டீன் டாக்டர் சவிச்சந்திரன் கூறுகையில் ”தம்சீர்கான் சேர்க்கப்பட்டது முதலே, அவருக்கு காய்ச்சலும் வயிற்றுப்போக்கும் தொடர்ந்து இருந்தது.

ஆனால் டெங்கு அறிகுறி ஏதும் இல்லை. ஆயினும் அவரது ரத்த மாதிரி டெங்கு பரிசோதனை முடிவு இன்னும் வரவில்லை. வயிற்றுப்போக்கு அதிகரித்ததால் தான் அவர் உயிரிழந்துள்ளார்” என்றார்.