Skip to main content

பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு; தலையமங்கலத்தை தொடர்ந்து திருவாரூர்!!

Published on 10/08/2020 | Edited on 10/08/2020
Prime Minister’s housing scheme; Thiruvarur following Thalayamangalam

 

கிணறு தோண்ட பூதம் கிளம்பிய கதையாக மன்னார்குடி தாலையமங்கலத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் நடந்துள்ள ஊழல் ஒட்டுமொத்த திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளை கதிகலங்கவே செய்துவருகிறது.

அந்தவகையில் திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இரண்டு பெண் அதிகாரிகள் அடித்துள்ள பெரும் கொள்ளையால், மற்ற அதிகாரிகள் தங்களுக்கு ஆபத்துவந்துவிடுமோ என அதிமுக, திமுக பிரமுகர்களின் உதவியை நாடிவருகின்றனர்.

 

Prime Minister’s housing scheme; Thiruvarur following Thalayamangalam


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தலையாமங்கலம் ஊராட்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 245 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் முதல் கட்டமாக 144 பேருக்கு வங்கியில் பணம் செலுத்துவதற்கு உண்டான ஆவணங்களை அதிகாரிகள் வாங்கியுள்ளனர். ஆனால் பணத்தை பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தாமல் அதிகாரிகள் தங்களது சொந்த கணக்கில் செலுத்தியதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். மூன்று குழுக்கள் நடத்திய விசாரணையில் கோடிக்கணக்கில் அதிகாரிகளும், அதிமுகவினரும் சுருட்டியிருப்பதை கண்டுபிடித்தனர். அதில் சம்மந்தபட்ட நான்கு அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.

இதுபோல மாவட்டம் முழுவது நடந்திருப்பதையும், குறிப்பாக திருவாரூர்,திருத்துறைப்பூண்டி ஊராட்சிகளில் அதிகமாகவே நடந்திருப்பதை நமது நக்கீரனில் ஊராட்சி பெயரோடு எழுதியிருந்தோம், அதனை படித்த பாதிக்கப்பட்டோர் நம்மை தொடர்புகொண்டு இன்னும் கூடுதல் தகவலையும் வழங்கினர்.

இதற்கிடையில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த், மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்யலாமா என ஆலோசித்துவரும் நிலையில், ஊழலில் தொடர்புடைய அதிகாரிகள் திமுக, அதிமுக பிரமுகர்களின் நிழலை தேடிவருகின்றனர்.

" திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஓவர்சியராக இருக்கும் ஹேமலதா யாராவது வீட்டுக்கு வழங்கப்படும் சிமெண்ட், கம்பி கேட்க சென்றால் முகத்தில் அறைவதுபோல தடாலடியாகவே பேசி அனுப்பிவிடுகிறார். அவர் கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சிகளை ஆய்வு செய்தால், தலையமங்கலத்தையே மிஞ்சிவிடும். ஆய்வு குழுவின் ஆய்வு தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சிகளுக்கு வந்துவிடாதபடி எல்லா வேலைகளையும் செய்துவருகிறார். அவரிடம் யார் எது கேட்டாலும் எனக்கும் அரசியல் செல்வாக்கு இருக்கு, எதுவும் என்ன செய்துவிடமுடியாது என்பதுபோல பேசுகிறார். நிச்சயம் அவர் தொடர்பான ஊழலை ஆய்வு செய்கிறோம்  விரைவில் தலையமங்கலம் போல பட்டியலை  வெளியிடுவோம்," என்கிறார்கள் கம்யூனிஸ் கட்சியை சேர்ந்த சிலர்.

கலக்குடி தியாகராஜன் என்பவர் கூறுகையில்," எனக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட்டை கேட்டேன். அதற்கு அவங்க உன் இஸ்டத்துக்கு கொடுக்கமுடியாதுன்னு தகாத வார்த்தைகளை சொல்லி திட்டினார். ஒரு பெண்ணாக இருப்பவர் இப்படி பேசலாமா, என அவரிடம் கேட்டதுதான் என்னுடைய தவறு அதற்காக என் வீட்டையே முடக்க நினைத்துவிட்டார். ஆண்கள் ஊழலில் ஈடுபடுவதும், அதட்டி பேசுவதும் இயல்பு, ஆனால் தாய்மை குணம் கொண்ட பெண்ணாக இருப்பர் இப்படி செய்வதும்,  இப்படிப் பேசுவதும் ரொம்ப கஷ்டமாகிடுச்சி. மனம் நொந்து ஒரு தாழ்த்தப்பட்டவன் வீடு கட்டக்கூடாதா, அரசாங்கம்தானே எங்களுக்கு பணம் கொடுக்குது, அந்த அம்மா இல்லையே என பி.டி.ஓ விடவும்,பிறகு அமைச்சரிடமும் முறையிட்டேன் நடவடிக்கை எடுப்பதாக சொன்னார். சாதாரண ஒவர்சியரான ஹேமலதா மாவட்ட ஆட்சியரை போல் நடந்து கொள்வதற்கும், அவரது ஊழலை கண்டுகொள்ளாமல் கடத்து போவதற்கும் காரணம் புரியவில்லை." என்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்