சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமைச் செயலர், டிஜிபி ஆகியோருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர மனு ஒன்றை அளித்துள்ளார்.
v
அதில் நீதிமன்றம் உத்தரவிட்டும் இந்த பிரிவுக்கு தேவையான 8 ஆய்வாளர்கள், 47 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளை நியமிக்கவில்லை என்றும், தேவையான வாகனங்கள் ஆகியவற்றை தரவில்லையென்றும் மனுவளித்தார். தான் சிறப்பாக பணியாற்றுவதை தடுக்கவே அதிகாரிகள் இப்படி செய்கிறார்கள் என்றும், சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவில் நீதிமன்ற அனுமதியின்றி ராஜேஸ்வரி என்பவர் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் புகாரளித்துள்ளார்.
அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை அவமதித்திருப்பதால், அவர்களை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்கீழ் தண்டிக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். நீதிமன்றத்தை பொன்.மாணிக்கவேல் நாடியிருப்பது இது முதல்முறை அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.