![Police commemoration Day Celabaration in Chennai IG office](http://image.nakkheeran.in/cdn/farfuture/2lmdcYkBbU7iG7zeZmAm1BwltmOj0-gfL1yPGhjbiCg/1603273009/sites/default/files/2020-10/02_28.jpg)
![Police commemoration Day Celabaration in Chennai IG office](http://image.nakkheeran.in/cdn/farfuture/harfozExlYP05nzqq998muBayvrOVgCsPTTmRhMbztk/1603273009/sites/default/files/2020-10/01_28.jpg)
![Police commemoration Day Celabaration in Chennai IG office](http://image.nakkheeran.in/cdn/farfuture/2BlaNn0MLTs5Ig4vZX00JpMMhbkLEkrr_nHEzgGiCuc/1603273009/sites/default/files/2020-10/04_23.jpg)
![Police commemoration Day Celabaration in Chennai IG office](http://image.nakkheeran.in/cdn/farfuture/GXS_WaqqMZWoz2tJTFZgdaMlwpPAkMxPCi8T3ftOZgg/1603273009/sites/default/files/2020-10/03_28.jpg)
![Police commemoration Day Celabaration in Chennai IG office](http://image.nakkheeran.in/cdn/farfuture/bHv6VFBN0hLhSjhNuVI4UwaOJ5_66jUkTqf7cDGHY5M/1603273009/sites/default/files/2020-10/05_12.jpg)
![Police commemoration Day Celabaration in Chennai IG office](http://image.nakkheeran.in/cdn/farfuture/GZ_9iZwC1I5aGnWQWcXSfKV_HU7TLnGMrOwmiYeIoBU/1603273009/sites/default/files/2020-10/06_9.jpg)
Published on 21/10/2020 | Edited on 21/10/2020
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி பணியின்போது உயிர் நீத்த காவலர்களுக்கு அரசு சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று காலை 08.00 மணிக்கு மயிலாப்பூரிலுள்ள, தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் காவலர்கள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
அப்போது காவல்துறையினர் சார்பில் அணிவகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் டி.ஜி.பி. திரிபாதி சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.