மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில் மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் குட்கா பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக பதுக்கி வைத்து விற்பனை செய்தவர்களின் இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் நேற்று (2.12.21) ஒரே நாளில் 276 வழக்குகள் (திருச்சி-79, புதுக்கோட்டை-40, கரூர்-25, பெரம்பலூர்-23, அரியலூர்-51, தஞ்சாவூர்-10, திருவாரூர்-15, நாகபட்டினம்-3, மயிலாடுதுறை-30) பதிவு செய்யப்பட்டு 274 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ரூ.1,56,116/- மதிப்புள்ள சுமார் 136 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை தொடரும் எனவும், தடை செய்யப்பட்ட புகையிலை போதை பொருட்களை விற்பனை செய்தால், குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் அருகில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் எச்சரித்துள்ளார்.