Skip to main content

வந்துசேர்ந்தது அதிகசக்தி கொண்ட 2 வது ரிக் இயந்திரம்!-47 மணிநேரத்தை கடந்து போராட்டம் 

Published on 27/10/2019 | Edited on 27/10/2019

திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுபட்டியில் ஆள்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு முயற்சி எடுத்து வருகிறது.

இரண்டு நாட்களாக பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்திருந்தாலும் இறுதிக்கட்டமாக ரிக் இயந்திரத்தைக் கொண்டு 3 மீட்டர் இடைவெளியில் ஒரு மீட்டர் அகலத்தில் குழி தோண்டும் பணி கடந்த ஒன்பது மணி நேரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிசக்திவாய்ந்த மற்றொரு இயந்திரம் நடுகாட்டுப்பட்டி ப்பகுதிக்கு வந்திருக்கிறது. இந்த இயந்திரம் தற்பொழுது துளையிடும் இயந்திரத்தை விட மூன்று மடங்கு சக்தி வாய்ந்த இயந்திரமாகும். இந்த இயந்திரத்தை கொண்டு துளையிடும் பணிகள் நடைபெறும்.
 

NN

 

குழந்தை சுஜித் நலமுடன் மீண்டுவர தமிழகம் மட்டுமல்லாது உலக அளவில் பிரார்த்தனைகள், கூட்டுப்பிரார்த்தனைகள் நடைபெற்றுவருகிறது. சுஜித் நலமுடன் மீண்டு வர இலங்கை யாழ்ப்பாணத்தில் மக்கள் திரண்டு அமைதிப் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அதேபோல் சுஜித் மீள வேண்டும் என சென்னை சாந்தோம் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் திருவான்மியூரில் உள்ள பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்று வருகிறது. திருவாரூர் பாத்திமா பேராலயம் தக்கலை மதரஸா மாணவர்களும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து 47 மணி நேரத்தை தாண்டி இந்த மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல்  சுஜித் குழந்தை மீட்கப்பட்டடு மீண்டும் ஒன்றிணைய பிரார்த்திக்கிறேன். நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடும் நிலையில் தமிழகத்தில் குழந்தையை காப்பாற்ற தீவிர முயற்சி நடைபெற்று வருகிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.அதேபோல் விடுதலை சிறுத்தை கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் சுஜித்தின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பெண் வேடத்தில் குழந்தை கடத்தலா?-வேகமாக பரவும் வதந்தி

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
A gang of child traffickers masquerading as girls?-a rumor spreading fast

'புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் பெண் வேடமிட்டு 10 பேர் குழந்தைகளை கடத்த இறங்கி உள்ளனர். அதில் ஒருவன் பிடிபட்டு விட்டான். மீதிப்பேர் எங்கே என்று தெரியவில்லை. அதனால் கவனமாக இருங்கள்' என்ற ஒரு ஆடியோவுடன் சிறிய வீடியோ ஒன்றும் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் வியாழக்கிழமை காலை முதல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர்.

என்ன நடந்தது? எப்படி இந்த வதந்தி பரவியது?

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் கீரமங்கலத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு நேற்று வியாழக்கிழமை காலை சேலை, சட்டை அணிந்த ஒருவர் சென்று அங்கிருந்த சிலரிடம் தவறாக பேசியதும் அங்கிருந்தவர்கள் விரட்டியது அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் நின்ற குழந்தைகளிடம் பேசியதைப் பார்த்த அப்பகுதியினர் கீரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்து பிடித்து ஒப்படைத்துள்ளனர். அந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் விசாரணை செய்த போது அவர் பொன்னன்விடுதி கிராமத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்பதும், வீட்டில் பாதுகாப்பில் இருந்து தப்பி வந்தவர் வழியில் எங்கோ காயப்போட்டிருந்த ஒரு பெண் சேலை, சட்டையை போட்டுக் கொண்டு கீரமங்கலம் வந்து இப்படி நடந்து கொண்டதும் தெரியவந்தது.

மேலும் சம்பந்தப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட நபரை அவரது உறவினர்கள் தேடிக் கொண்டிருப்பதும் தெரியவந்தது. அவர்களை அழைத்து சம்பந்தப்பட்ட ஒப்படைத்துள்ளனர். ஆனால் அதற்குள் குழந்தைகளை கடத்த பெண் வேடமிட்டு 10 பேர் வந்ததில் ஒருவர் சிக்கிக் கொண்டார் மற்றவர் இந்தப் பகுதியில் சுற்றுவதாக ஆடியோ வதந்தி பரவிக் கொண்டிருக்கிறது. இப்படி யாரும் வரவில்லை பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று போலீசார் கூறுகின்றனர்.

Next Story

விஜய் பிறந்தநாள் நிகழ்ச்சி; சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
actor Vijay Birthday party incident at Neelangarai near Chennai

சென்னையை அடுத்துள்ள நீலாங்கரையில் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் பிறந்தநாள் விழா இன்று (22.06.2024) நடைபெற்றது. இந்த விழாவானது அக்கட்சியின் மாவட்டத் தலைவர் சரவணன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையொட்டி இந்த விழாவில் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

அதன்படி சிறுவன் ஒருவனின் கையில் தீ பற்றவைக்கப்பட்டு தீ எரிந்தபடி அந்த சிறுவன் கையால் ஓடு உடைக்கும் சாகச நிகழ்வு நடத்தப்பட்டது. இதற்காக மேடையில் ஓடுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதே சமயம் சிறுவனின் கையில் தீ பற்றவைக்கப்பட்டு, சிறுவன் ஓடுகளை உடைத்த போது, கையில் பற்றி எரிந்த தீ அணையாமல் தொடர்ந்து எரிந்துகொண்டே இருந்தது. இதில், சிறுவன் வலியால் துடிப்பதைக் கண்டு அருகில் இருந்த நபர் தண்ணீர் என நினைத்து பெட்ரோல் கேனை எடுத்து சிறுவன் கையில் ஊற்றியாதக் கூறப்படுகிறது.

இதனால் மேலும் கைகளில் தீ பற்றி எரிந்தது. இதனைக்கண்டு அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன் பிறகு தீயை அணைத்து, சிறுவன் உடனடியாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் சிறுவனின் கையில் பற்றிய தீயை அணைக்க முயன்றவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் இவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.