Published on 24/01/2019 | Edited on 24/01/2019
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றக்கோரிய வழக்கில் வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், ரூ 16.75 கோடி வரி பாக்கிக்காக கடந்த 2007-ம் ஆண்டிலே ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை முடக்கி விட்டோம் என்றும் அதுமட்டுமின்றி ஐதராபாத்தில் உள்ள ஒரு வீடும் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த வரி பாக்கியை செலுத்திவிட்டால் போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்ற ஆட்சேபமில்லை என்று வருமானவரித் துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.