திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையின் அடிவாரத்தில் கண்ணமங்களம் அடுத்துள்ள ஆனந்தபுரம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பள்ளி அருகில் மலையில் இருந்து சாராயம் கொண்டு வந்து கீழே வைத்து அதை பிளாஸ்டிக் பாக்கெட்டாக மாற்றி பாக்கெட் 25 ரூபாய், 50 ரூபாய் என விற்பனை செய்கின்றனறாம்.
குடிமகன்கள் குடித்துவிட்டு அந்த வனத்திலேயே பிளாஸ்டிக் பேக்களை போட்டுவிட்டு செல்வது ஒருப்புறம்மென்றால், மற்றொரு புறம் அந்த பக்கம் செல்லும் பள்ளி மாணவ – மாணவிகள் பயந்துப்போய்வுள்ளனர். குடிக்காரர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் குடித்துவிட்டு அங்கேயே சத்தம் போடுவதால் பள்ளியில் வகுப்பு நேரம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக கண்ணமங்களம் மற்றும் சந்தவாசல் என இரு காவல்நிலையத்துக்கும் சாராயம் காய்ச்சி எடுத்துபவர்கள் குறித்த தகவலையும், சாராயம் விற்கும் இடங்கள் குறித்த தகவலை தெரிவித்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.