![jail](http://image.nakkheeran.in/cdn/farfuture/sSO5l7297wTkI3u_ro2rJtBDmHBcMBxWijUMiAOklVg/1537468592/sites/default/files/inline-images/jail%2055_0.jpg)
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த திருச்சிற்றம்பலத்தை சேர்ந்தவர் பிரவீன் (வயது 20). கல்லூரி மாணவரான இவர், அதே பகுதியில் பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவரை விரும்பியுள்ளார்.
அந்த மாணவி பள்ளிக்கு செல்லும்போதெல்லாம் அவரை பின்தொடர்ந்து சென்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். முதலில் விலகி சென்ற அந்த மாணவி, பின்னர் பிரவீனுடன் பழகியுள்ளார்.
இந்த நிலையில் பிரவீன் மாணவியை திருமணம் செய்வதாக ஆசைக்காட்டி அவருடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். திடீரென ஒரு நாள் அந்த மாணவி தனது தாயாரிடம் வயிற்று வலி என்று கூறியுள்ளார்.
மருத்துவமனைக்கு சென்று சோதித்தபோது, அந்த மாணவி கர்ப்பமடைந்தது தெரிய வந்தது. இதனை கேட்டு மாணவியின் பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர். மாணவியின் பெற்றோர் கர்ப்பத்தை கலைக்க முயற்சி செய்தனர்.
ஆனால் மாணவி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனால் மாணவியின் உடல்நலம் பாதிக்கப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்ததனர். இதனால் அந்த முயற்சியை கைவிட்டனர். மேலும் மாணவியை மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மாணவியின் பெற்றோர் மயிலாடுதுறை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் பிரவீன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பிளஸ்-1 மாணவியை கர்ப்பிணியாக்கிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்த சம்பவம் மயிலாதுறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.