Skip to main content

அரசு சத்துணவில் பிளாஸ்டிக் அரிசி... அதிர்ந்த ஊர் மக்கள்!

Published on 24/09/2021 | Edited on 24/09/2021

 

 Plastic rice in government food ... shocked villagers!

 

அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்திருப்பதாகவும், இதனால் பல மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

 Plastic rice in government food ... shocked villagers!

 

ஓசூர் அருகே கெலமங்கலம், ஜெ.காருப்பள்ளியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு அரசு சார்பில் அரிசி, பருப்பு போன்ற சத்துணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. அப்படி வழங்கப்பட்ட சத்துணவு பொருட்களான அரிசியை சமைத்து சாப்பிட்ட மாணவர்களுக்குத் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, கொடுக்கப்பட்ட அரிசியை ஆய்வு செய்து பார்த்ததில், அதில் பிளாஸ்டிக் அரிசி கலந்திருப்பதைக் கண்டு ஊர் மக்கள் அதிர்ந்தனர். பிளாஸ்டி அரிசிகளை எடுத்து தண்ணீரில் போட்டதும் அவை மிதந்துள்ளன. இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர்கள் புகாரளித்ததை அடுத்து பள்ளிக்கு வந்த அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுமி கொலை; பெற்றோர் உட்பட 3 பேர் கைது!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
girl child incident for Bagalur near Hosur in Krishnagiri District

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூர் கிராமத்தில் பிரகாஷ் (வயது 40) - காமாட்சி (வயது 35) என்ற தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களின் 11 ஆம் வகுப்பு படித்து வந்த மகள் கடந்த 14 ஆம் தேதி (14.02.2024) வீட்டில் இருந்து வெளியே சென்றார் எனவும், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை எனவும் கூறப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் உடலில் காயங்களுடன் ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சிறுமியின் மரணம் குறித்து விசாரணை நடத்தினர்.  அப்போது இளைஞர் ஒருவரை சிறுமி காதலித்து வந்ததாகவும், அதனை பெற்றோர்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.  அதன் பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த இளைஞர் மீண்டும் சிவாவுடன் பழகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் சிவாவுடன் பழகக் கூடாது என பெற்றோர் கூறியதை சிறுமி ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சிறுமியை பெற்றோரே கட்டையால் தலையில் தாக்கி கொன்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சிறுமியின் பெற்றோரிடமும் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிறுமி காணாமல் போன அன்று வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமரா துணியால் மறைக்கப்பட்டதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுமியின் பெற்றோரான பிரகாஷ் - காமாட்சி மற்றும் சிறுமியின் பெரியம்மா காமாட்சி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறைச் சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

Next Story

40 டன் பிளாஸ்டிக் பறிமுதல் - வியாபாரிகளுக்கிடையே தகராறு

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
30 thousand tons of plastic seized in Tiruvannamalai

திருவண்ணாமலை நகரில் சிவன்படவீதி என்கிற கருவாட்டுக்கடை தெருவில் பிளாஸ்டிக் மொத்தமாக விற்பனை செய்யும் குடோனில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கரபாண்டியன் நேரடியாக ஆய்வு செய்தார். வெளியே பார்க்க கடைபோல் இருந்தது, உள்ளே சென்றால் குறைந்த பட்ச காற்று வசதி கூட இல்லாமல் பாதாள குகைக்குள் போவதுபோல் சுத்தி சுத்தி போய்க்கொண்டே இருந்தது. உள்ளே பரந்துவிரிந்த குடோனில் பயன்படுத்தக்கூடாத வகையை சேர்ந்த பிளாஸ்டிக் கவர் பாக்கெட்டுகள் மூட்டை மூட்டையாக அடுக்கிவைக்கப்பட்டு இருந்ததைப்பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அதன் உரிமையாளர் என வந்தவர் கலெக்டரிடம், நான் ஜீ.எஸ்.டி கட்டிட்டு தான் இந்த பொருளை வாங்குறேன், அது எப்படி குற்றமாகும், இதை எதுக்கு பறிமுதல் செய்யறிங்க? என கேள்வி எழுப்பினாரர். நீங்க இந்த பொருளை எங்கயிருந்து வாங்கறிங்க? சேலத்தில் இருந்து என்று பதிலளித்தார்.

இதனைத் தொடர்ந்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்வது சட்டப்படி தவறு. நீங்க இந்த பிளாஸ்டிக் வாங்கும் இடத்தின் முகவரியை சொல்லுங்க என்று கேட்டனர். அதற்கு, “தெரியாது, போன் செய்வேன் சரக்கு அனுப்புவாங்க சார்” என பல்டியத்தார். அட்ரஸ் தெரியாம எப்படி பொருள் வாங்கறீங்க? பணம் தர்றீங்க? ஜி.எஸ்.டி கட்டறதா சொல்றீங்க எனக்கேட்க பதில் சொல்ல முடியாமல் மழுப்பினார்.

30 thousand tons of plastic seized in Tiruvannamalai

நகராட்சி ஊழியர்களை வைத்து உள்ளிருந்த பிளாஸ்டிக் பொருட்களை குப்பை வண்டியில் ஏற்றி அனுப்பிக்கொண்டே இருக்க, வந்துகொண்டே இருந்தது. அந்த ஒரு குடோனில் இருந்து மட்டும் சுமார் 30 ஆயிரம் கிலோவுக்கு மேல் பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தனர். மாவட்டம் முழுவதும் 40 டன் பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நெகிழி என்கிற பிளாஸ்டிக் பறிமுதல் செய்யச்சென்ற கடைகள் மற்றும் குடோன்களில் காலாவதியான, பயன்படுத்த தகுதியற்ற உணவு பொருட்களான டொமோட்டா சாஸ், பாதாம், முந்திரி பாக்கெட்டுகள், திண்பண்ட பொருட்களும் இருந்தன. இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை வரவைத்து ஆய்வு செய்யச்சொன்னார் கலெக்டர். “நாங்க விற்கிறோம் மளிகை கடை, ஹோட்டல்காரங்க வந்து வாங்கிக்கிட்டு போறாங்க, அங்கயெல்லாம் ஏன் ரெய்டு போகல..” என வடநாட்டை சேர்ந்த அந்த முதலாளி கேட்க, அங்கிருந்த மற்ற வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் வியாபாரிகளுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

படங்கள் - எம்.ஆர். விவேகானந்தன்