![Over 20 students injured in private school van overturn accident](http://image.nakkheeran.in/cdn/farfuture/q4uDjpRWbUJuPcRhdyAymfhpPaSFnB23MHCb4Z579Ns/1680676780/sites/default/files/inline-images/nm147.jpg)
திருச்சி அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது; அதில் பல மாணவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலை அருகில் செயல்பட்டு வருகிறது கேந்திரிய வித்யாலயா எனும் தனியார் பள்ளி. சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் திருச்சி கே.கே.நகர் பகுதியிலிருந்து 20க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக்கொண்டு அப்பள்ளியின் வேன் சென்று கொண்டிருந்த பொழுது மாத்தூர் அடுத்துள்ள வடுகபட்டி அருகே சாலையோரம் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கை, கால் முறிவும், தலையில் காயமும் ஏற்பட்டது. உடனடியாக மாணவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து நாவல்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.